நீயுனக்குச்
சொந்தமல்லவே
மீட்கப்பட்ட
பாவி நீயுனக்குச் சொந்தமல்லவே
நீயுனக்குச்
சொந்தமல்லவே
நிமலன்
கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்
1.சிலுவைமரத்தில்
தொங்கி மரித்தாரே
திருரத்தம்
இரத்தம்
திருவிலாவில்
வடியுது பாரேன் மிகுந்த
பரிசத்தால்
கொண்டாரே மோட்ச மகிமை உனக்கீவாரே
2.இந்த
நன்றியை மறந்துபோனாயோ இயேசுவைவிட்டு
எங்கேயாகிலும்
மறைந்து திரிவாயோ
சந்ததமுனதிதயம் காயமும்
இயேசு
கிறிஸ்தினுடையதல்லவோ
3.பழைய
பாவத்தாசை வருகுதோ பிசாசின் மேலே
பட்சமுனக்குத்
திரும்ப வருகுதோ
அற்ப
நிமிஷத்தாசை காட்டியே
அக்கினிக்கடல்
தள்ளுவானே
4.பிழைக்கினும்
அவர்க்கே பிழைப்பாயே
உலகைவிட்டு
மரிக்கினும் அவர்க்கே மரிப்பாயே
மரித்து
உயிர்த்த இயேசுநாதரின்
மலரடி
எந்நாளும் நிலைப்பாய்