நிர்ப்பந்தமான
மனிதன் நான்
விடுதலை
தேடி ஓடி வந்தேன்
இயேசுவைப்
போல வாழ்வதெப்போ
உள்ளத்தில்
ஏங்கி தவிக்கின்றேன்
1.நன்மை
செய்தும் என்னிடத்தில்
தீமை
உண்டென்று காண்கிறேன்
நானல்ல
எனக்குள் வாசம்செய்யும்
பாவப்
பிரமாணம் இழுக்கின்றதே
2.விரும்பும்
நன்மையைச் செய்யாமல்
விரும்பாத தீமையைச்
செய்கிறேன்
பாவத்தின்
கீழாய் விற்கப்பட்டேன்
ஆதாமின்
சாபம் தொடர்ந்ததன்றோ
3.பரிசுத்தம்
என்று நம்பி செய்தேன்
அசுத்தமாக
கண்டு கொண்டேன்
பரிசுத்தமாக
வந்தேனய்யா
உம்மைப்போல சுத்தமாக
4.நீதியாய்
வாழ ஆசைப்பட்டேன்
கற்பனை
என்னை தடுத்ததன்றோ
இச்சை
பாவம் இல்லையென்றால்
நீதிமானாய்
நிமிர்ந்து நிற்பேன்
5.தேவனே
உம்மைத் துதிக்கின்றேன்
என்
பாவ மாம்ச சாயலிலே
கிறிஸ்து
நீதியாய் வாழ்ந்தாரே
நம்பிக்கை
எனக்குத் தந்தாரே
6.நானும்
இயேசுவைப் பின்பற்றுவேன்
இயேசுவைப்
போல மாறிடுவேன்
விடுதலை
அவரில் கண்டுகொண்டேன்
விந்தையாய்
என்னை மாற்றுவாரே