எந்தன்
ஜீவனிலும் மா அருமை
உந்தன்
கிருபை கிறிஸ்தேசுவே
அந்தமே
இல்லா அன்பின் ஆழமதை
எண்ணி
நான் துதித்திடுவேனே
1.சந்தோஷமுடன்
துதி சாற்றிடுவேன்
சந்ததம்
நல்கிடும் நன்மைகட்காய்
நாவினாலே
திருநாமத்தைப்
போற்றிட
நாட்களும் போதுமோ நானிலத்தில்
2.இகமதில்
என் பெலன் குறைந்திடினும்
அகமதில்
உம் பெலன் பெருகுவதால்
கழுகினைப்
போல் புது வாலிபம் என்னுள்ளில்
கிருபையால்
அனுதினம் வளர்ந்திடுதே
3.கோதுமை
மணி மண்ணில் மாய்வது போல்
சேவையில்
ஜீவனை ஊற்றிடினும்
தேவா
நின் கிருபையின் ஊற்றென்னில்
பாய்வதால்
சோராது நிறைபலன் ஈந்திடுவேன்
4.அற்புதமாய்
என்னை அழைத்தவரே
அற்பமான எந்தன் சரீரத்தினை
தற்பரனே
உந்தன் சாயல் மாற்றிடும்
ஒப்பற்ற
சுவிசேஷம் ஈந்திட்டீரே