நீரே
என்னை காண்கிற தேவன்
கருத்துடன்
என்னை நடத்துவீரே
உமது
மாறா கிருபையாலே - 2
அடியேனை
தாங்கி நடத்துவீரே
1.தாயின்
கருவில் முதற் கொண்டு
தெரிந்தென
தன்பின் தேவன் நீரே - 2
முதற்
பலனாய் எம்மை நிறுத்திடவே
நித்திய அன்பால்
அழைத்து விட்டீர்
2.உமது
பலத்த கரத்தினிலே
நாளும்
இருக்க கிருபை தாரும்
பரிசுத்த
வழியில் நடந்திடவே
கர்த்தாவே
நீர் என் வெளிச்சமே
3.ஆதியும்
அந்தமும் ஆன தேவா
ஆர்ப்பரிப்புடன்
நீர் இறங்கிவாரும்
மணவாளன்
உம்முடன் இணைந்திடவே
மகிமையில்
என்னையும் சேர்த்து கொள்ளும்!