சுந்தர
கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்!
1.மனுவுருவானவனை
ஸ்தோத்தரிக்கிறேன் - மோட்ச
வாசலைத்
திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்
2.கனி
வினை தீர்த்தவனை
ஸ்தோத்தரிக்கிறேன் - யூத
காவலனை
ஆவலுடன் ஸ்தோத்தரிக்கிறேன்
3.எனை
இரட்சித்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் - கிறிஸ்து
இயேசு
நசராதிபனை ஸ்தோத்தரிக்கிறேன்
4.அனை
மனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன் - மேசியாவை
மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்!