தேவாதி
தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி
வணங்கிடுவேன்
1.அற்புதமான
அன்பே - என்னில்
பொற்பரன்
பாராட்டும் தூய அன்பே
என்றும்
மாறா தேவ அன்பே
என்னுள்ளம்
தங்கும் அன்பே
2.ஜோதியாய்
வந்த அன்பே
பூவில்ஜீவன்
தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான
தேவ அன்பே
திவ்விய
மதுர அன்பே
3.மாய
உலக அன்பை - நம்பி மாண்ட
என்னை
கண்டழைத்த அன்பே
என்னை
வென்ற தேவ அன்பே
என்னில்
பொங்கும் பேரன்பே
4.ஆதரவான
அன்பே - நித்தம் அன்னை போல்
என்னையும்
தாங்கும் அன்பே
உன்னதமாம் தேவ அன்பே
உள்ளம்
கவரும் அன்பே
5.வாக்கு
மாறாத அன்பே - திரு
வார்த்தையுரைத்
தென்னைத் தேற்றும் அன்பே
சர்வவல்ல
தேவ அன்பே
சந்ததம்
ஓங்கும் அன்பே