சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப்
போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம் (2)
ஆ ஆ ஆ அல்லேலூயா (3) ஆமென்
1.
வானம் பூமி ஓழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து
மறைந்துபோம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்(2)
2.
கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே (2)
3.
எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசிர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம்
படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசிர்பெறவே (2)
4.
சபையின் அஸ்திபாரம் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து
பாதுகாத்தென்றுமே
சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே!(2)