மலைகள் விலகிப் போனாலும்
பர்வதம் நிலையற்றுப் போனாலும்
தேவ கிருபையோ விலகாது (2)
1. பூமியில் உம்மைத் தவிர
யாருமில்லையே
பரலோகில் உம்மைத் தவிர
யாருமில்லையே
பூமியில் வாழ்ந்தாலும்
பரலோகம் சென்றாலும் (2)
நீரின்றி துணையேதைய்யா
நீரின்றி வழியேதைய்யா (2)
2. பூமியில் அந்நியனும் பரதேசி நான்
நீரென்னை காண்கின்ற
தெய்வமல்லவோ
உலகத்தின் முடிவுவரை
நடத்திடும் தெய்வமே
நீரின்றி துணையேதைய்யா
நீரின்றி வழியேதைய்யா(2)
3. யாரென்னை வெறுத்தாலும்
வெறுக்காதவர்
அனுதினம் தாங்கிடும்
கிருபை அல்லவோ
நிற்பதும் நிலைப்பதும்
கிருபையில்தானே
நீரின்றி துணையேதைய்யா
நீரின்றி வழியேதைய்யா (2)