மனுவாயினார் மஹத்வ ராஜன்
மனுவாயினார் (2)
1. பரலோகம் திறந்திட
பரன் ஆவி இறங்கிட
தேவ அருள் பொங்க
பாவ இருள் நீங்க
மன்னுயிர்கள் தேவ
மன்னிப்பை பெற்றிட
2. நோய் , பிணி தீர்த்திட
பேய்த்திரள் நடுங்கிட
அன்னை போல் அணைத்து
அன்பர்களைக் காக்க
தன்னையே பலியாக
அன்புடன் ஈந்திட
3. சாவின் கசப்பு மாற
தவிப்பு, கண்ணீர் நீங்க
மரணம் தனை வென்று
மறுவாழ்வு ஈந்திட
விண் வீட்டில் தம்முடன்
மண்னோர் நாம் வாழ்ந்திட