இயேசுவுக்கு சொந்தமான
பிள்ளைகள் - அவர்
அன்புக்கு அடிபணிந்த சீஷர்கள்
தேவகரம் வடிவமைத்த
ஜீவ சிற்பங்கள் - அவர்
ஆற்றலுக்கு வலுவான உயிர்
சான்றுகள்
இசாவா நாங்கள் இசாவா
“இயேசுவைச் சேர்ந்தவர்கள்” இசாவா!
நாங்கள்....
1. இயேசுவைப் பற்றிக் கொண்ட
புத்திசாலிகள்!
உன்னதத்தில் கொலுவிருக்கும்
விந்தை மாந்தர்கள்!
நிலை வாழ்வும் நிறை வாழ்வும்
கண்ட ஞானிகள்!
சாத்தானை தோற்கடிக்கும்
வெற்றி வீரர்கள்! நாங்கள்....
2. பாவமாந்தார் மீட்பைக் காணும்
அடையாளங்கள்!
தேவ செய்தி சுமந்தலையும்
இராஜ மடல்கள்!
தூய்மை மணம் வீசுகின்ற
நற்கந்தங்கள்!
வாழ்வை பான பலியாக்கும்
உயிர்த்தோழர்கள்!நாங்கள்....
3. தேவ அரசு விடிய உழைக்கும்
போராளிகள்!
தேசத்தைக் கலக்குகின்ற
சாவின் எதிரிகள்!
இராஜநெறி பரப்புகின்ற
புரட்சியாளர்கள்!
தேவனுக்காய்
வாழ்ந்து முடிக்கும்
நித்ய சாட்சிகள்!நாங்கள்....