ஆராய்ந்து பாரும், கர்த்தரே!
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும்
2. ஆராயும் என்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர்
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்
3. ஆராயும் சுடரொளியால்
துராசை தோன்றவும்
மெய்
மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும்
4. ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும்
அசுத்த மனோபாவனை
உள்ளிந் திரியங்களும்
5. ஆராயும் மறைவிடத்தை
உம் தூயக் கண்ணினால்
அரோசிப்பேன் என் பாவத்தை
உம் பேரருளினால்
6. இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன்
உம் சரணார விந்தத்தில்
பணிந்து போற்றுவேன்