இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
பளிங்கு கடல் மீதும்
மாட்சி நகர்நின்றும்
தூதரின் இன்பகீதம்
பூரிப்புண்டாக்கிடும்
இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
2. இயேசுவின் கைகள் காக்க
பாழ் லோகின் கவலை
சோதனை பாவக் கேடும்
தாக்காது உள்ளத்தை
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே
வதைக்கும் துன்பம் நோவும்
விரைவில் தீருமே
3. இயேசு என் இன்ப கோட்டை
எனக்காய்
மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன்,
நீரே நித்திய கன்மலை
காத்திருப்பேன்
அமர்ந்து ராக்காலம்
நீங்கிட
பேரின்ப கரை சேர
மா ஜோதி தோன்றிட