தூய தூய தூயா சர்வவல்ல நாதா
தேவரீர்க்கெந்நாளும்
சங்கீதம் ஏறுமே
தூய தூய தூயா மூவரான
ஏகா காருணியரே தூய
திரியேகரே
2. தூய தூய தூயா அன்பர் சூழ
நின்று
தேவ ஆசனமுன்னர் தம் கிரீடம்
வைப்பரே
கேரூபிம் சேராபிம் தாடிநந்து
போற்றப் பெற்று
இன்றென்றும் வீற்றாழ்வீர்
அநாதியே!
3. தூய தூய தூயா ஜோதிப்
பிரகாசா
பாவக்கண்ணால் உம்தன்
மாண்பைக் காண யார் வல்லோர்
நீரே தூய தூயர்,
மனோவாக்குக்கெட்டா
மாட்சிமை, தூய்மை! அன்பும்
நிறைந்தோர்
4. தூய தூய தூயா சர்வவல்ல நாதா
வானம் பூமி ஆழி உம்மைத்
துதிசெய்யுமே
தூய தூய தூயா மூவரான
ஏகா காருணியரே தூய
திரியேகரே!