சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன் (2)
1. ஆனந்தம் பாடி அன்பரைச்
சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் (2) -
அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள்
சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம்
(2)
2. துயரப்பட்டவர் துதித்துப்
பாடுவார்
துதியின் உடையுடனே (2) - அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம் (2)
3. முள் முடி நமக்காய்
அணிந்த மெய்
இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் (2)-
அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள்
வெள்ளங்கி
தரித்தோராய்
துதித்திடுவோம்
4. பூமியின் அரசைப்
புதுப்பாட்டாய்
பாடி
புன்னகை பூத்திடுவோம் -
புது எண்ணெயால்
அபிஷேகம்
பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்
5. மனுஷர் புகழ்ச்சி
மாய்மால வாழ்க்கை
களைந்தே ஒழித்திடுவோம் அங்கே
வெண்வஸ்திரம் தரித்து
தூயவரோடு மகிழ்வுடன்
வாழ்ந்திடுவோம்
6. திவ்ய சுபாவ பொறுமையைக்
காத்து கிரீடத்தைப் பற்றிக்
கொள்வோம் அவர் ஆலயத்
தூணாய்
நாட்டப்பட்டே நாம்
எந்நாளும் நிலைத்திருப்போம்
7. கிரயம் செலுத்தி ஆவியில்
ஏழ்மை கொண்டோராய்
வாழ்ந்திடுவோம்-ஜெயம்
பெற்ற நம் இயேசு அமர்ந்த
சிங்காசனம் அவரோடு
அமர்ந்திடுவோம்