இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்
1. எதிரியைத் துரத்திடும்
இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும்
இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம்
ஜெயம் அதிசயம் செய்திடும்
இரத்தம் ஜெயம்
2. பாவங்கள் போக்கிடும்
இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம்
ஜெயம் சமாதானம் தந்திடும்
இரத்தம் ஜெயம் - நமக்கு
3. விடுதலை தருகின்ற இரத்தம்
ஜெயம் வெற்றிமேல் வெற்றி
தரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும்
இரத்தம் ஜெயம்
பெலவானாய்
மாற்றிடும்
இரத்தம் ஜெயம்
4. நமக்காய்
பரிந்துபேசும்
இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும்
இரத்தம் ஜெயம்
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவன் தரும் இரத்தம்
ஜெயம்
5. பிரிவினை நீக்கிடும் இரத்தம்
ஜெயம் பிளவுகள்
போக்கிடும் இரத்தம்
ஜெயம்
ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம்