இகமதில் அவரைப் புகழ்வேன் (2)
1. பாவங்கள் போக்கிடும் நாமம்
பரிசுத்தம் நிறைந்த நல் நாமம்
அகமதிலே அருள்தனையே
அளிக்கும் அன்பு தேவன்
2. இயேசு காட்டும் பாதை
இடறில்லா அன்பின் வழியே
ஜீவ வழி என்றவரே
ஜீவன் தந்த தேவன்
3. சிலுவையில் தொங்கும் மீட்பர்
சிறந்த வாழ்வின் பங்கு
சுதந்திரமே நல்கிடுவார்
சுகமாய்
தங்கி வாழ்வேன்
4. சீஷனாய்
என்னையும் அழைத்த
அவர் அன்பின் குரல்
நானும் கேட்டேன்
சிலுவைதனை சிநேகித்தேனே
தீவிரம் அவர் பின்னே சென்றேன்
5. இயேசுவின் பாதத்தில் அமரும்
இனிய தியானமாம் வாழ்க்கை
பூலோகத்தில் உம்மையல்லால்
வேறொரு விருப்பமும் இல்லை