இனியும் உம்மோடு கிட்டிச்சேர
ஆவியின் மாரியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில்
என்னை ஆடிநத்தி கிருபைகள்
ஈந்திடுமே
1. பெலவீனன் என் அருகில்
பெலன் தாரும் வந்தெனக்காய்
உம்மைப் போல் நான் கனி
தரவே உமதாவியால்
நிறைத்திடுமே
2. நல்ல திராட்சை செடி நீரல்லோ
நானும் இணைந்து வாழ்ந்திடவே
எல்லா நாளும் கனி தந்திட
இயேசுவே சுத்தமாக்கிடுமே