Type Here to Get Search Results !

Tamil Song - 644 - Ullamellam Urukuthaiyo

உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மை யல்லால் வேறே தெய்வம்
உண்மையாய்  இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே உம்
சொந்த மாக்கிக் கொண்டீரே

2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையோ துரோகம்
நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமல்லோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையே

3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் தோன்றும் நாளன்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏக்க மெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை
நான் முகமுகமாய்  தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்

சோகம் நீங்கும் நாள் என்றோ?