தெய்வத்தின் சந்நிதானம் என்
உள்ளத்தின் ஆனந்தமே
காருண்யமாம் அவர் சப்தம்
என் காதுகளுக்கின்பமே
1. தளர்ந்த மனம் புதிதாக்கும் நல்லன்பு
தகர்ந்த ஆன்மாவிற்கு சாந்திதரும்
அவர் தரும் வாக்குத்தத்தங்கள்
உன்னை அனுதினம் வழி நடத்தும்
2. உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமே
நோக்கிடு கல்வாரி நாயகனை
இயேசுவின் பாதத்தில் வீடிநந்திடுவாய்
ஆறுதல் கண்டடைவாய்