அத்திமரம் துளிர்விடாமற்
போனாலும் திராட்சச்செடி பழம்
கொடாமற் போனாலும்
ஒலிவமரம் பலனற்றுப் போனாலும்
நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (2)
1.வயல்களிலே தானியம்
இன்றிப் போனாலும்
மந்தையிலே முதலற்றுப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப்
போனாலும்
நான் இயேசுவுக்குள்
மகிழ்ச்சியாயிருப்பேன் (2)
2.நதிகளிலே தண்ணீர்
வற்றிப் போனாலும்
நாவறண்டு நான் மயங்கி வீழ்ந்தாலும் உடலழிந்துஉயிர்பிரிந்துபோனாலும்
நான் இயேசுவுக்குள்
மகிழ்ச்சியாயிருப்பேன் (2)
3.வீட்டினிலே பணமின்றி போனாலும்
நிந்தனையும் துன்பங்கள் வந்தாலும்
தீமையான பொய்மொழி சொன்னாலும்
நான் இயேசுவுக்குள்
மகிழ்ச்சியாயிருப்பேன் (2)