தேவன் சொன்னதைச் செய்ய
வல்லவர் என்று
நம்பிக்கையை அறிக்கையிடுவோம்
1.சபை கூடி வருவோம் நாம்
தலையாகிய கிறிஸ்துவுக்குள்
அன்பின் ஆழம் நீளம் உயரம்
அளந்து அறிவோமே
2.பாவத்தின் வஞ்சனையால்
கடினப்பட்டுப் போகாமல்
நாள்தோறும் நாம்
புத்திசொல்லி தேறிடுவோமே
3.தாழ்மையில் தரித்திடுவோம்
கிருபையைப் பெற்றிடுவோம்
பாதாளம் மேற்கொள்ளா
சரீர சபையைக்கட்டி
எழுப்பிடுவோம்
4.ஒருவரில் ஒருவர் நாம்
ஊக்கமாய் அன்புகூர்வோம்
தன்னைத் தானே நேசிப்பதுபோல
பிறரை நேசிப்போமே
5. தீமையை வெறுத்திடுவோம்
நன்மையைப் பற்றிக்கொள்வோம்
நம்மை நாமே நியாயந்தீர்த்து
தேவ சாயலாவோம்
6. சபையாய் நாம் துதித்திடுவோம்
சர்வ வல்ல தேவனை
துதிகள் கனமும் மகிமை எல்லாம்
செலுத்திப் போற்றுவோமே