இரட்சகரே இயேசுவே
இரக்கத்தின் ஐசுவரியமே
இல்லாதவைகளை
இருக்கிறவைபோல மாற்றும் என் தேவனே
1.மனிதன் எல்லரிலும் மூடன் நான்
பாவிகளில் நான் பிரதான பாவி
துரோகியைத் தேடி வந்திரல்லோ
உம்மைப் போல மாற்றிடவே
2.பாவத்தின் கீழாக விற்கப்பட்டேன்
நரகாக்கினைக்கென்று
நியமிக்கப்பட்டேன்
சாபத்தைப் போக்க சாபமானீர்
பாவியை மீட்க பாவமானீர்
3.நீரே நல்ல மேய்ப்பரல்லோ
போதகரும் சகோதரரும்
உம்மையல்லால் எங்கே செல்வேன்
நீரே எந்தன் தஞ்சமன்றோ
4.என்னைப்போல சோதிக்கப்பட்டீர்
என்னைப்போல எல்லாவிதத்திலும்
சோதிக்கப்பட்டு உண்மையானீர்
உதவி செய்ய வல்லவராய்
5.சூழ்நிலைகள் மாறும் போது
விசுவாசமே அசைகின்றதே
நம்பிக்கை அறிக்கை செய்யும்போது
புதிய பெலன் தருகின்றீரே