வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னிடம் உண்டோ பாரும் தேவா (2)
சோதனை வழி நீக்கி என்னை
நித்திய வழி தன்னில் நடத்தும் (2)
1. சொல் சிந்தனை செயல் யாவையும்
என் தேவனே நீர் அறிவீர் (2)
சொல்லும் செயலும் ஒன்றாயிருக்க
கிருபை செய்யும் என் இயேசுவே (2)
2. நின்றாலும் நடந்தாலும் அமர்ந்தாலுமே
நீர் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர் (2)
உள்ளத்திலே உண்மை இருக்க
கிருபை செய்யும் என்¬இயேசுவே(2)