பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன்
ஆனால் பலமுறை ஏனோ தவறுகிறேன்
உம்மா லன்றி என்னால் இயலாதையா
பரிசுத்தம் காத்திட பெலன் தந்திடும்
1. மறைவான பாவங்கள்
அறிக்கை செய்ய
உள்ளம் நொறுங்கிட
தூயாவி உணர்வைத் தாரும்
அறிவின் பெருமைகள்
மனமேட்டிமைகள்
ஆத்மீக கர்வங்கள்
நீங்கச் செய்யும்
2. பரிசுத்தம் காத்திடும் ஊழியனாய்
என்னை முற்றிலும்
தாழ்மையால் அலங்கரியும்
அறுவடை நாயகன் களஞ்சியத்தில்
ஆத்துமாக்கள் சேர்க்க பயன்படுத்தும்