பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து
நிற்கும் மா பாவி நான்
என்னை ஆட்கொண்டு நிதம்
உம் அருள் தந்து
கிருபையாய்
வழிநடத்தும்
இதயக் கதவை திறந்தேனே
என் உள்ளத்தில் வாரும் இயேசு சுவாமி
பெலவீனம் யாவையும் போக்கிக்
காத்துக் கொள்ளும் தேவா (2)
2. என் கரம் உம் கையை பிடித்துச்
சென்றால்
தவற விடுவேனே
ஆனால் உம் கரம் என் கையை
பிடித்துச் சென்றால்
ஒருக்காலும் தவறிடேனே
3. பூவுலக சத்தமும் என் மாம்ச சத்தமும்
இணைந்து ஒலிக்குதே
ஆனால் மெல்லிய உம் சத்தம்
தெளிவாக கேட்டிட
என் செவியை திறந்திடுமே