இறைவா உம் அருள் காணச் செய்யும்
அற்புத அடையாளமே என் வாழ்வில்
அனுதினம் காணச் செய்யும் - இறைவா
1. கானாவூர் கல்யாண வேளையிலே
கர்த்தர் உம் வருகை அளித்தீரன்றோ
தண்ணீரை ரசமாக மாற்றினதும்
உந்தனின் அற்புதமே!
2. குருடர் செவிடர் முடவரையும்
திமிர் வாதக்காரனை சுகமாக்கினீர்
மரித்த லாசரு எழுந்ததுமே
உந்தனின் அற்புதமே!
3. பசியாலே வாடிய மாந்தருக்கும்
அப்பமும் மீனும் அளித்தீரன்றோ
குஷ்டரோகியும் குணமானதும்
உந்தனின் அற்புதமே!