வாருமையா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேருமையா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்
2. ஒளி மங்கி இருளாச்சே
உத்தமரே வாருமையா
கழித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வீர்
3. ஆதரையிலெம் ஆறுதலே
அன்பருக்கு சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய்
ஜீவ சற்குருவே
4. நாமிருப்போம் நடுவிலென்றீர்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலந்தருவீர்
5. உந்தன் மனைத் திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவீர்
பந்தமறப் பரிகரித்தே
பாக்கிய மளித்தாண் டருள்வீர்
6. பாடுமடியேன் கவியைப்
பாரினில் கேட்டனு தினமும்
தேடுந்தொண்டர் துலங்கவுன் நல்
திவ்விய ஆவி தந்தருள்வீர்!