Type Here to Get Search Results !

Tamil Song - 525 - Vinai Soozhathintha

வினை சூழாதிந்த இரவினில் காத்தாள்
விமலா, கிறிஸ்து நாதா!
கனகாபி ஷேகனே, அவனியர்க்
கொளிர், பிரகாசனே,
பவ நாசனே, ஸ்வாமி!

1. சூரியன் அஸ்தமித்து ஓடிச்
சென்றானே!
ஜோதிநட் சத்திரம் எழுந்தன வானே!
சேரும் விலங்கு பட்சி
உறைபதி தானே
சென்றன; அடியேனும்
பள்ளி கொள்வேனே

2. சென்ற பகல் முழுதும் என்னைக் கண்
பார்த்தாய்; செய்  கருமங்களில்
கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்மசரீரம் பிழைக்க
ஊண் பார்த்தாய்;
பொல்லாப் பேயின் மோசம்
நின்றெனைக் காத்தாய்!

3. இன்றைப் பொழுதில் நான் செய்
பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னை
கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும்
உவந்தருள் கூராய் ;
உயிரை எடுப்பையேல்,உன்
முத்தி தாராய் !

4. ஜீவன் தந்தெனை மீட்டோய்
சிறியேன் உன் சொந்தம்
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல்
நிர்ப்பந்தம்;
பாவியேன் தொழுதேன் நின்
பாதார விந்தம்;
பட்சம் வைத்தாள்வையேல்,

அதுவே ஆனந்தம்!