தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னம் தேவை கிருபை தாருமே
1. நிர்மூலமாகததும்
நிற்பதுமோ கிருபை!
நீசன் என்பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக்கொண்டேன்
காத்துக்கொள்ள கிருபை தாருமே
2. தாழ்மையுள்ளவரிடம்
தங்கிடுதே கிருபை!
வாழ்நாளெல்லாம் அதுபோதுமே
பாவமெல்லாம் நான் ஜெயம்கொள்ள
தொடர்ந்தென்றும் கிருபை தாருமே
3. தினம் அதிகாலையில்
தேடும் புது கிருபை!
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே
4. மாபரிசுத்த ஸ்தலம்
கண்டடைவேன் கிருபை!
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்
சகாயம் பெற
சோதனை நேரம் கிருபை தாருமே
5. ஒன்றை ஒன்று சந்திக்கும்
சத்தியமும் கிருபை!
என்றும் மறவேன்
வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலை நிற்கும் கிருபை தாருமே