Type Here to Get Search Results !

Tamil Song - 494 - Saththiya Vethaththai

சத்திய வேதத்தைத் தினம் தியானி,
சகல பேர்க்கும் அதபிமானி
உத்தமஜீவிய வழிகாட்டும்,
உயர்வானுலகில் உனைக்கூட்டும்

1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்;
வயோதியர்க்கும் அதுண வாகும்;
பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ
தாத்மபசி தணிக்கும் - சத்திய

2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அது நல் ஆயுதமாம்;
புத்திரர் மித்திரரொடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும்

3. புலைமேவிய மானிட ரிதயம் புனிதம்
பெறுதற்கதுமருந்தாம்;
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம்

4. கதியின் வழிகாணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும்

பயணத்துணையும் அது!