பக்தரின் விசுவாச ஜீவியம்போல்
பத்திரமாம் வாழ்வு வேறேயுண்டோ?
பரலோக தந்தை தன்
பவித்திரமாம் பொக்கிஷம்
தனக்கெனக்கண்டு
சந்தோஷமாய்
வாழ்ந்திடும்
1. அன்னிய தேசத்து பரதேசியாய்
மண்ணிதில் கூடார வாசிகளாய்
உன்னதனாம் தெய்வம்
சிற்பியாய்
நிர்மித்த
உச்சித நன்நகர் சேர்க்கையை
ஆசிக்கும்
2. அக்கினிமேக ஸ்தம்பந்தன்னில்
தெய்வம்
மாறாத காவல் நிற்கும் வனத்தில்
அன்றன்று அவர் நல்கும்
மன்னாவில் திருப்தியாய்
அக்கரை தேசத்தில் அக்கரை
கொண்டிடும்
3. பின்னாலே பெலமிக்க சத்துருக்கள்
முன்னிலோ செங்கடல் வன்திரைகள்
என்கிலும் விசுவாசச்
செங்கோலை நீட்டிவன்
செங்கடலும் பிளந்தக் கரை
சேர்ந்திடும்
4.பாவத்தின் தற்கால போகம்
வேண்டாம்
பரமன் திருமக்கள் கஷ்டம் மேலாம்
எகிப்தின் பொக்கிஷம்
ஏதும் வேண்டாமென்று
கிறிஸ்துவே நிலையுற்ற
சம்பத்தென்றெண்ணிடும்