அனுதினம் அவர் பாதம்
ஆசையாய்
அமர்ந்து
அவருக்கு முதலன்பை
ஆவலாய்
அளித்து
இயேசுவே வாஞ்சையாய்
இன்பமாழ்க் கருதும்
உள்ள முடையோனே
உண்மை சீஷன்
சீஷனாய்
மாறுவேன் நான்
சீஷராய்
மாற்றுவேன் நான்
என்னாலே ஒன்றுமில்லையே
எல்லாம் என் இயேசுவால் கூடுமே
2. சுயத்தை வெறுத்து
சிலுவையை சகித்து
சுய சித்தம் உடைத்து
அவயவம் படைத்து
இயேசுவின்சாயலில்அனுதினம்வளரும்
இன்பம் பெற்றவனே உண்மை சீஷன்
3. உடைப்பட்ட அப்பமாய்
உலகத்தின் உப்பாக
ஜோதியாய்
ஜொலிக்கும்
வெளிச்சமாய் எங்கெங்கு செல்லினும்
இயேசுவைச் சொல்லிடும்
இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன்
4. சீஷராய்
மாற்றுங்கள் என்றுரைத்தார்
சிலுவை சுமந்து உயிர் கொடுத்தார்
சிலுவையை எடுத்துப்
பின் செல்வேனே
சீஷர்கள் பெருகிட உழைத்திடுவேன்