இயேசு எங்கள் தேவா
எங்கள் இயேசு தேவா!
எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட
இனிய தேவா!
1. உள்ளத்தை மாற்றி
உண்மையை ஊட்டி
உலகத்தை வெறுத்திட உயிர்
கொடுத்தீர்
உலகத்தை ஜெயித்து உம் ஜீவன் தந்து
உயர்வானம் ஏறி வரம் கொடுத்தீர்!
2. பாவத்தை ஏற்று மரிக்கவும் வந்தீர்
பரலோகம் தன்னையும்
கொண்டுவந்தீர்
பாவத்தை நீக்கி பரிசுத்தமாக்கி
பரலோக பாக்கியம் எமக்களித்தீர்!
3. உமக்கு நான் துரோகி,
உண்மைக்கும் துரோகி
உயர்ந்த உம் அன்புக்கும் மா துரோகி
உயர்ந்த உம் அன்பால்
உருக்கினீர் என்னை
உன்னத அன்புக்கே நான் அடிமை
4. மாற்றினீர் என்னை,
தேற்றினீர் உண்மை
மா பாவியாம் என்னை
மீட்டுக் கொண்டீர்
மாபாவிகட்காய்
மரித்ததென் அன்போ!
மரணத்தை ஜெயித்தும் எழுந்தீரே!
5. பரிசுத்த ஆவி, பரம தேவனே
பரிசுத்தர் பாதம் பணிகிறோமே
பரன் மகிமைக்கே குமாரனை ஏற்றே
பாத்திரமாய்
எம்மை ஆக்கிடுமே
6. பரம பிதாவே! பணிகிறோம் பாதம்
பாதகராம் நாங்கள் பிள்ளைகளோ!
பரம குமாரன் ஆவியினாலே
பரம பிதாவே பணிகிறோமே