உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
1. வழிப்பிரயாணி மூடனைப் போல்
வழி தவறா நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும்
2. அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இராவு பகல் கூட நின்று
என்றென்றுமாய்
நடத்திடுமே
3. எண்ணிடேன் நான் யாதொன்றையும்
புண்ணியர் தேசம் காணும்வரை
பரதேசியாய்
சஞ்சரிப்பேன்
பாரம் என்னைத் தாக்கிடாமல்
4. திருமார்பில் நான் சாய்ந்திடுவேன்
அருட் பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திரு சித்தத்தை
அறிவதல்லோ தூய வழி
5.உம் ஞானத்தை எனக்குத் தந்து
உம் வழிதனிலே நடத்திடுமே
சத்துரு என்னை மேற்கொள்ளாமல்
தினமும் என்னைக் காத்திடுமே