ஏசுவே என் ராஜாவே
மெய்யன்பு காட்டும் நண்பனே
உம்மைப் போல என்னை மாற்ற
உலகத்தில் நீர் வந்தீரே
உந்தன் அன்பு என்னில் விளங்க
உயிரையும் நீர் தந்தீரே
1.மனிதரால் வரும் மகிமையை
முற்றும் வெறுக்க உதவுமே
மாயமான தாழ்மை நீங்கி
மாசற்றதாய்
மாற்றுமே
2. நலமானதையும் பேசாமல்
அமர்ந்திருக்க உதவுமே
நாவடக்கம் என்னில் தந்து
தூய பக்தி யாக்குமே
3. என்னைப் போல பிறரையும்
நேசிக்க என்றும் உதவுமே
உம்மைப் போல மன்னிக்கின்ற
உள்ளத்தை நீர் தாருமே
4.பிறரின் நல்ல குணங்களை
கண்டு என்றும் மகிழவே
அனுதினமும் என்னை நானே
நியாயந்தீர்க்க உதவுமே
5. உம் இதய பாரங்கள்
என்தன் உள்ளம் ஆக்குமே
உம்மைப் போல விழித்திருந்து
ஜெபிக்க பெலன் தாருமே