உமக்காகத்தானே ஐயா
நான் உயிர் வாழ்கிறேன் - மெய்யாய்
என் உடலும் உள்ளமெல்லாம்
அன்பர் உமக்காகத்தானே ஐயா
1.பண்படுத்தும் உம் சித்தம்போல
பயன்படுத்தும் உம் விருப்பம்போல
உம் கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே
2.எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மனநிறைவோடு பணிசெய்வேன்
3.கோதுமைமணி போல் மடிந்திடுவேன்
உமக்காய்தினமும்பலன்கொடுப்பேன்
அவமான நிந்தை சிலுவைகளை
அனுதினமும் நான் சுமந்திடுவேன்
4.எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான்எண்ணவில்லை
எல்லோருக்கும் நான் எல்லாமானேன்
அனைவருக்கும்
நான் அடிமையானேன்
5.எனது பேச்செல்லாம் உமக்காக
எனது செயல் எல்லாம் உமக்காக
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக