ஆரும் துணை இல்லையே எனக் காதியான் திருப்பாலா
- உன் தன்
ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத் தாளுவாய், யேசுநாதா
சீர் உலாவு பூங்காவில் ஓர் கனி தின்ற பாதகம் மாற்றவே,
சிலுவை மீதினிலே உயிர்விடும் தேவனே, என் சுவாமி!
1.முந்து மானிடர் தந்த வினை முழுவதும்
அறவேண்டிய, முள்முடியுடன் குருசில் ஏறிய
முன்னவா கிருபை கூர்வையே! சிந்தும் உன் உதிரத்தில் என் வினை
தீர்த்திரட்சியும், ஐயனே யபாவி எனக்கு வேறொரு
செயலிடம் துணை இல்லையே!
2.தந்தை, தாயாரும், மைந்தர் மாதரும் சகலரும்
உதவார்களோ; சாகும்நாளதில் நீ அலால் எனைத்
தாங்குவார்களும் உண்டுமோ?
சொந்தம் நீ எனக்கன்றி,
வேறொரு சொந்தமானவர் இல்லையே சுற்றமும்,
பொருள் அத்தமும் முழபத்தமே, என தத்தனே!
3.கள்ளனாயினும் வெள்ளனாயினும்
பிள்ளை நான் உனக் கல்லவோ? கர்த்தனே,
வலப் பக்கமேவிய
கள்ளனுக் கருள் செய்தையே! தள்ளி
என்னைவிடாமல் உன்னடி தந்து காத்தருள் அப்பனே,
தயவாய் ஒரு குருசில் ஏறிய சருவஜீவ தயா பரா!
4.நன்றி அற்றவனாகிலும்,
எனைக் கொன்று போடுவதாகுமோ?
நட்டமே படும் கெட்ட மைந்தனின்
கிட்ட ஓடினதில்லையோ?
கொன்றவர்க் கருள் செய்யும்
என்று பிதாவை நோக்கியே கொற்றவா,
குற்றம் ஏது செய்தாலும் நீ,
எனைப் பெற்றவா, பொறுத்தாள்வையே!
5.பத்தியேதும் இலாது மாய சுகத்தை நாடிய
பித்தனாய்ப் பாழிலே என்றான் நாள் எலாங் கெடுத்
தேழையாகினேன் என்செய்வேன்?
சத்ருவான பிசாசினால் வரும் தந்திரம் கொடிதல்லவோ?
தஞ்சம் அற்றவன் ஆகினேன், உன தஞ்சல் கூறும் அனாதியே