மேற்கு முதல் கிழக்கு வரை இடைவெளியின் தூரமே
அளவில்லாத கிருபையே -
ஆஹா
விண்முதலாய் மண் வரையில் நடுவிலுள்ள
தூரமே வரம்பில்லாத கிருபையே கடவுளின் மகா கிருபையே -
2
கிருபையே - 2 எல்லாமே கிருபையே
1.கிறிஸ்துவுடன் தேவன் தரும் யாவுமே
கிருபையே கல்வாரியின் மேட்டினில்
விளைந்து கனிந்த கிருபையே இரட்சிப்பின்
ஆரம்பம் முடிவுமட்டும் தொடருமே - 2
கிருபையே - 2 எல்லாமே கிருபையே!
2.காலைதோறும் உதயமாகும்
புத்தம் புது கிருபையே போதும்
என்று சொன்னாலும் கரை புரளும் கிருபையே
ஆழியாய் பொங்கிடுமே அமிழ்தமே கிருபையே -
2
கிருபையே - 2
எல்லாமே கிருபையே!
3.நிற்பதும் நிலைப்பதும் நித்தியரின் கிருபையே
மோசம் போக ஒட்டாமல் காக்கும் வல்ல
கிருபையே உன்னதம் சேர்த்திடும் விண்கலமே கிருபையே - 2
கிருபையே - 2 எல்லாமே கிருபையே!
4.தாழ்மை உள்ளம் வாசம் செய்யும் விண்ணரசே
கிருபையே பகிர்ந்தளிக்கும் குறைந்திடாத
ஊற்றுநீர் கிருபையே தேவனண்டை
நிலைவரமாய் நிற்க வைக்கும் கிருபையே -
2
கிருபையே - 2 எல்லாமே கிருபையே!