தினம் பாடுவேன் நான்
தினம் பாடுவேன் இயேசுவின் அன்பை நான்
தினம் பாடுவேன்
(2)
1.ஒரு நாளில் கடற்கரை நடந்துவந்தார்
தன்னையே வருத்திடும்
இளைஞன் கண்டார்
(2)
அன்புடன் அருகினில் விரைந்து
சென்றார் பேய் நீக்கி நலமான வாழ்வு தந்தார் - தினம்
2.ஒரு நாளில் பெண் ஒன்றை எறிந்துகொல்ல
பெருந்திரள் கூட்டம் நெருங்கி வர (2)
அமைதியாய் பதில் கூறி
தடுத்து நின்றார்
மனதார மன்னித்து மனம் மகிழ்ந்தார்
3.இழந்தவர் நலிந்தவர் ஒடுக்கப்பட்டோர்
பாவிகள் பாதகர் எவராயினும் (2)
இயேசுவின் அன்பை ஏற்றுக்கொண்டால்
குறை நீங்கி இனிதாக வாழ்ந்திடலாம்