அன்பு நிறைந்த பொன் இயேசுவே
1.உன்னதத்தை விட்டிறங்கி
என்னிடம் வந்த நாதா - நான்
உம் அடிமை உம் மகிமை
ஒன்று மாத்திரம் என்னாசையாம்
2.ஜீவனற்ற பாவி யென்னில்
ஜீவன் பகர்ந்த இயேசுவே!
உம்மைவிட மண்ணில் வேறே
நேசிப்பதில்லை நான் யாரையும்
3.குற்றுயிராய் கிடந்த என்னை
முற்றும் நீர் தீர்- அதால்
என்னிலுள்ள நன்றி உள்ளம்
தாங்குவ தெங்ஙனம் நேசரே!
4.இன்றுலகில் கண்ணீருடன்
உம் வசனம் விதைக்கிறேன்
அன்று நேரில் உம் அருகில்
வந்து பலன்களைக் காண்பேன் நான்
5.என் உள்ளத்தில் வாசம் செய்யும்
மகிமையின் நம்பிக்கையே
நீர் வளர்ந்தும் நான் குறைந்தும்
உம் மகிமைக்குள் மறைவேன் நான்