தேவன்பின் ஜீவியமே
தெய்வ தாசருக்கவசியமே
1.ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால்
உலகம் எமை எடுத்தே
ஏசுவின் சீஷர்கள் இவர்களென்றே மெய்ச்
சாட்சி பகர்ந்திடுமே
- நற்சாட்சி
2.அன்புக்கு மாறாய் மன
மதிலெழும்பும் வம்புகளை ஒழித்தே
தேவன் அன்பாக இருப்பதினாலே
அன்பினால் நிறைந்திடுவோம்
3.பாசமாய் எமையும் நேசித்தாரேசு
ஜீவனையே ஈந்தே நாமுமே
அது போல் ஒருவரிலொருவர்
நேசமாய் வாழ்ந்திடுவோம்
- நல்
4.எது இருந்தாலும் அன்பிலையானால்
நான் ஒன்றுமில்லையென்றே அப்போஸ்தலன் தான்
உறுதியாய் உரைத்தே
போதனை புரிந்தாரே
- நற்