உள்ளம் உருகிக் கனியாதா
உணர்வு தூய்மை அடையாதா
வெள்ளம் போன்ற உமதன்பில்
விரும்பி உறைதல் எந்நாளோ
2.கள்ளமான எண்ணங்கள்
கழிந்தே இன்பம் பெருகவே
உள்ளம் தூய்மை ஆகவே
உள்ளத் தொளியே வாராயோ
3.எண்ணம் புதிதாய் மலராதோ
ஏட்டில் புதுமை பிறக்காதோ
மண்ணுலகில் மாந்தர்கள்
மாசு நீங்கி வாழாரா
4.தண்ணிமை தயவு தர்மங்கள்
தாரணி மீது படரவே மண்ணும்
விண்ணாய் மாறவே
விண்ணின் ஒளியே வாராயோ
5.உதயம் வாழ்வில் தோன்றாதா
உண்மை ஒளிதான் பிறக்காதா
நிதமும் வாய்மை நித்தியமாய்
நிலவாய் எங்கும் நிறையாதா
6.அதர்மம் ஒடுங்கிப் போகாதா
ஆன்மா அன்பில் அமிழ்ந்திடவே
இதமாய் இங்கே வாழவே
இதய ஒளியே வாராயோ