மறவாதே மனமே - தேவ சுதனை
மறவாதே மனமே - தேவ சுதனை
1.திறமதாக உன்னைத்
தேடிப் புவியில் வந்து
அறமதாக செய்த
ஆதி சுதன் தயவை
2.விண்ணின் வாழ்வும்
அதன் மேன்மை அனைத்தும்விட்டு
மண்ணில் ஏழையாக
வந்த மானுவேலை
3.கெட்ட மாந்தர் பின்னும்
கிருபை பெற்று வாழ
மட்டில்லாதபரன்
மனுஷனானதயவை
4.நீண்ட தீமை யாவும் நீக்கி
சுகம் அளித்திவ்வாண்டு
முழுதும் காத்த
ஆண்டவனை எந்நாளும்
5.நித்தம் நித்தம் செய்த
நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த
அருமை ரட்சகனை நீ
6.வருஷம், வருஷம் தோறும்
மாறாத் தமதிரக்கம் பெருகப்
பெருகச் செய்யும்
பிதாவின் அனுக்ரகத்தை