Type Here to Get Search Results !

Tamil Song - 423 - Deivanpin Vellame

தெய்வன்பின் வெள்ளமே
திருவருள் தோற்றமே
மெய்மன தானந்தமே
செய்ய நின் செம்பாதம்
சேவிக்க இவ்வேளை
அய்யா நின் அடி பணிந்தேன்!

2.சொந்தம் உனதல்லால்
சோர வழிசெல்ல
எந்தாய் துணிவேனோ
யான் புந்திக்கமலமாம்
பூமாலை கோர்த்து நின்
பொற்பாதம் பிடித்துக் கொள்வேன்!

3.மரணமோ ஜீவனோ
மறுமையோ பூமியோ மகிமையோ
வருங்காலமோ வேறு சிருஷ்டியோ
உயர்ந்ததோ தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை!

4.ஆசைப்பாசம் பற்று ஆவலாய்
நின்திருப் பூசைப்பீடம் படைப்பேன்
மோச வழிதனை முற்று மகற்றி
யென் நேசனே நினைத்தொழுவேன்!

5.பாவச்சேற்றில் பலவேளை
பலமின்றி பாதையைத் தவறிடினும்
கூவி விளித்து தன்
மார்போடணைத்தன்பாய்
கோது பொறுத்த நாதா!

6.மூர்க்ககுணம் கோபம் லோகம்
சிற்றின்பமும் மோக ஏக்கமானதை
தாக்கி யான் தடுமாறி தயங்கிடும் வேளையில்

தற்பரா! தற்காத்தருள்வாய்!