பூவைப் போல் பூத்து மடிவதும்
மேகம் போல் தோன்றி மறைவதும்
ஆழியின்மேல் நீர் குமிழி போல்
நில்லாமல் நீங்கிடும் வாழ்க்கையே
நிரந்தரமல்ல இவ்வாழ்க்கையே (2)
மாயை இந்த வாழ்க்கை
மாறும் இதன் மேன்மை
மாறாதவர் இயேசுவே (2)
2. தாய்
தந்தை அன்பும் ஓய்ந்துபோம்
நேயர்கள் தீயராய் மாறுவர்
நெஞ்சத்தின் ஏக்கம் தனிமையை
வஞ்சகன் அன்புதான் மாற்றுமோ
தஞ்சம்தான் இயேசுவின்சிலுவையே (2)
3. நல் மேய்ப்பர் நண்பர் இயேசுவே
நடத்திடுவார் நித்யம் வரையிலே
அவரே வழி சத்தியம் ஜீவனே
அவர் அன்பு ஓர் நாளும் மாறாதே
அவர்தான் என் வாழ்வின் இன்பமே