மனிதன் யார் என்று உலகில்
யாருக்கும் தெரியாது
அவன்உருவம்கண்டுஇவன்தான்
என்று சொல்லிவிடாதே
அவனைத் தள்ளிவிடாதே (2)
1.மனிதனைப் படைத்த கடவுள்
அவனை மண்ணென்று சொன்னாரே
அவன் மண்ணென்று கண்டும் தேடியே
வந்து ஜீவனைத் தந்தாரே உறவும்
அன்பும் உள்ளவன் மனிதன் என்பதை மறவாதே அவன்
பழக்கம் கண்டு இவன்தான்
என்று முடிவு செய்யாதே,
அவனை இழந்து விடாதே
2.உலகில் பிறந்த மனிதரனைவரும்
தனித்தனி மனிதர்களே
இந்த மனிதர்கள் கூட்டத்தை
தேடியே செல்வோம்
தேவனின் பிரியர்களே
பரந்த இத்தேசம் இயேசுவைக் கண்டால்
எத்தனை நன்மை பெறும்
விரைந்தே உழைப்போம்,
அழுதே ஜெபிப்போம்
தொழுவோம் அவர் பாதம்
இந்த தேசத்துக்கே ஷேமம்