Type Here to Get Search Results !

Tamil song - 387 - Vithaippum Aruppumey

விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினிலே
மாரி மாரி வருமே
பகலும் இரவுமாய்
வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே

சிந்திப்பீர் சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே இன்றும் பிரதானம்

2.ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவென கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வாஞ்ச்சிக்காது
தேவப் போரினால் ஈடுபாடு

3.நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன் படுத்து

4.ஆழக் கடல்களில்
படகைச் செலுத்திட
கடல் போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ