அழைப்பின்
குரல் கேட்டேன்
என்
ஆண்டவர் என உணர்ந்தேன் (2)
அருகினில்
தயங்கி நடை பயின்றேன்
பின்னே
வா என முன்சென்றார் (2)
1.அறிவில்
குறைந்தவன் நானன்றோ
அதைத்
தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் (2)
அறிந்தவர்
செருக்கினை அகற்றிடவே
பின்னே
வா என முன்சென்றார் (2)
2.குறைகள்
நிறைந்தவன் நானன்றோ
அதைத்
தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் (2)
கருவில்இருந்துன்னைதெரிந்தவர்நான்(2)
பின்னே
வா என முன்சென்றார் (2)
3.வலிமை
குறைந்தவன் நானன்றோ
அதைத்
தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் (2)
வலியவர்
கொடுக்கினை வதைத்திடவே (2)
பின்னே
வா என முன்சென்றார் (2)