அன்பின்
தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
அவரின்
குரலைக் கேட்ட பின்னும்
கலக்கம் ஏன்?
1.மனிதர்
அன்பு மாறலாம்
மறைவாக தூது
பேசலாம்
அன்பு
காணா இதயமே
அன்பின்
இயேசுவை அண்டிக்கொள்
கல்வாரியின்
மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
கவலை
ஏன்? கலக்கம் ஏன்? கர்த்தர்
இயேசு அழைக்கிறார்
உன்னை
எண்ணி உள்ளம் நொந்து அணைக்க
இயேசு அழைக்கிறார்
2.வியாதிகள்
தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில்
இன்ப ஏக்கமோ கண்ணீர்தான்
உந்தன்
படுக்கையோ
எண்ணி
எண்ணி உள்ளம் துவளுதோ
3.பாவ
விடுதலை இல்லையோ
பரிசுத்த வாழ்வே கடினமோ
பழைய
பாவத் தொல்லையோ பார்
உந்தன்
நேசர் இயேசுவை
4.வேலை
வசதிகள் இல்லையோ
வீட்டினில்
வறுமை தொல்லையோ
மனிதர்கள் மத்தியில் வெட்கமோ
மருளாதே
மன்னன் இயேசு பார்
5.மனதின்
ஆழத்தில் குமுறலோ
மனதின்
அமைதி குறையுதோ
மரணப்
பயமும் நெருக்குதோ
மரணம்
வென்ற இயேசு பார்
6.தனிமை
என்ற தவிப்பும் ஏன்
தன்
மைந்தன் ஈந்தார் உன் பிதா
தயங்காதே
மனம் தளராதே
தாங்குவார்
உந்தனின் நேசரே