இயேசு இராஜன் வந்துவிட்டார்
நாம் கூடும் இந்த இடத்திலே
ஓசன்னா ஓசன்னா-2
1.இருளான உன் வாழ்வுதான்
இப்போ வெளிச்சமாகவே மாறுதே
இயேசுவின் பேரொளி நம்மேல் வீச
எழும்பி ஜொலித்திடுவோம்-2
2.அந்தகார வல்லமை முறித்திட
ஆவியானவர் இறங்கி இருக்கிறார்
கரத்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம்
அறுக்கப்படுகிறதே
3.ஆவியின் வல்லமை நம்மிலே
இப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார்
அனலாய் நாமும் கொழுந்து விட்டெறிய
அக்கினி இறங்கிடுதே
4.ஆசீர்வதிக்கும் கரங்களே நம்
சிரசின் மேலே அமருதே
நன்மையும் கிருபையும் சுகமும்
பெலனும் பாய்ந்து வருகின்றதே
5.துதிகளின் நடுவில் வசிப்பவர்
இப்போ நமக்குள்ளே வந்து இருக்கின்றார்
ஒரு மனமாய் நாம் ஆவியில் நிறைந்து
கர்த்தரை துதித்திடுவோம்!